கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸ்ஸி': ரூ. 2,260 கோடி ரூபாய் வசூல்!

THE ODYSSEY
கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸ்ஸி'
Published on

கிரேக்க காவியத்தைத் தழுவி உருவாக்கிய 'தி ஒடிஸ்ஸி' திரைப்படம், உலகம் முழுவதும் வெளியான முதல் வார இறுதியிலேயே ரூ. 2,260 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் 'தி ஒடிஸ்ஸி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம், பண்டைய கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய 'ஒடிஸ்ஸி' என்ற உலகப் புகழ்பெற்ற காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிமு 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் காவியம், உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரோஜன் போருக்குப் பிறகு, தனது தாயகமான இதாக்கா தீவுக்குத் திரும்ப மன்னர் ஒடிசியஸ் மேற்கொள்ளும் 10 ஆண்டுகால சாகசப் பயணமே இந்தக் கதையின் மையக் கரு ஆகும்.

படத்தில் மாட் டேமன் ஒடிசியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் டாம் ஹாலண்ட், அன் ஹாதவே, செண்டயா, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரான் உட்பட்ட பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ரூ. 2,140 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுமையாக ஐமேக்ஸ் 70 மி.மீ. கேமராக்களில் படமாக்கப்பட்டுள்ள நோலனின் முதல் திரைப்படம் இது.

இதன் பிரமாண்டமான காட்சியமைப்பு, தொழில்நுட்பத் தரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இருப்பினும், ஹோமரின் அசல் காவியத்தில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக இலக்கிய ஆர்வலர்கள் குறைப்பட்டுக்கொள்கின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com