உலகின் மிக பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு...!

குகை ஓவியம்
குகை ஓவியம்
Published on

இந்தோனேசியாவில் உள்ள சுண்ணாம்பு குகையில் 67,800 ஆண்டுகள் பழமையான கைரேகை ஓவியம் ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனேசியாவும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் உலகின் மிகப் பழமையான தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றவை. இந்த பகுதிகளில் இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், இந்தோனேசியா கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மற்ற ஓவியங்களில்பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட மனித உருவங்கள் காணப்பட்டன. குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் நிறமிகளை ஊற்றி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில விரல் நுனிகள் கூர்மையாக தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

'இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்றும் இது ஸ்பெயினில் உள்ள 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால் கை அச்சை விட சற்றே பழமையானது என்றும் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com