தனது கணவர் லீயுடன் சியாபங்
தனது கணவர் லீயுடன் சியாபங்

இது சாதாரண காதல் இல்லங்க…!

இந்த காதல் கதை கொஞ்சம் தலை சுத்த வைக்கலாம். காதல் பற்றிய முன் அனுமானத்தை தூக்கிப் போட்டுடு இதை படிச்சீங்கனா, ‘இது சாதரண காதல் இல்லங்கங்’னு நீங்களே சொல்லுவீங்க.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் வசித்து வருபவர் 80 வயதான லீ. இவர் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். இந்த முதியோர் இல்லத்துக்கு தன்னார்வலராக பணியாற்ற வந்துசேர்கிறார் அழகிய இளம்பெண்ணான சியாபங் (வயது 23).

இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேச, விரைவிலேயே நண்பர்களாகின்றனர். மாறிமாறி தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள, லீ-யின் முதிர்ச்சி, அன்பு, அறிவால் ஈர்க்கப்பட்ட சியாபங் காதலில் விழுகிறார். இதை அவர் தன் வீட்டாரிடம் சொல்கிறார்.

தாத்தா வயதுள்ள ஆணை மணந்துகொள்ள பெண் வீட்டார் மறுக்க, காதலன் மீதிருந்த அளவு கடந்த அன்பால், பெற்றோர்களுடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார் சியாபங்.

தனது கணவர் லீயுடன் சியாபங்
தனது கணவர் லீயுடன் சியாபங்

இந்த அதிசய ஜோடிகள், சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டதாக சீனா இணையப் பத்திரிகையான சோஹூ செய்தி வெளியிட்டது. இவர்களின் திருமண நிகழ்வில், உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையாம். ஆனாலும் இவர்கள் பரஸ்பரத்துடன் திருமண உறுதி ஏற்பை செய்து கொண்டுள்ளனர். ஆரோக்கியத்திலும், உடல்நலத்திலும் ஒருவருக்கொருவர் துணை இருப்பதாக உறுதியேற்றது ஆச்சரியப்பட வைக்கிறது.

சியாபங் தனது திருமண புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவேற்ற, அது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சமூக ஊடகத்தினர் வாயில், வயித்தில் அடித்துக் கொள்வதோடு, இவர்களின் காதல் குறித்த சந்தேகங்களை எழுப்பிவருகின்றனர். சியாபங், பணத்துக்காகத்தான் லீ-யை திருமணம் செய்து கொண்டார் என சொல்லப்பட்டாலும், லீ ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி பிழைப்பை ஓட்டுபவர். இப்படி ஆதரமாற்ற பல அவதூறுகளை பலர் அள்ளி வீசினாலும், இந்த காதல் ஜோடிகள் சிறக்கடித்துக் பறந்துக் கொண்டிருக்கின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com