15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
Published on

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த டென்மார் நாடு தடைவிதித்துள்ளது.

டென்மார்க் நாடாளுமன்றத்தில் இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்ட அந்நாட்டு பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், குழந்தைகளிடம் உள்ள குழந்தை மனநிலையை சமூக ஊடகங்கள் பறித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளை தொடங்க குறைந்தபட்சம் 13 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அந்த வயதிற்கு முன்பே 94 சதவீத குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்ததுவதாக கூறும் ஃபிரடெரிக்சன்,”குழந்தைகள் திரையில் பார்க்கக்கூடாத விஷயங்களை பார்ப்பதாக” தெரிவித்துள்ளார்.

குழந்தைகளிடம் அதிகரித்து வரும் மன அழுத்தம், சோர்வு, சமூகத் தனிமை போன்றவற்றை கருத்தில் கொண்டே சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பதாக ஃபிரெட்ரிக்சன் கூறியுள்ளார்.

எந்தெந்த சமூக ஊடகத் தளங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்பதை விளக்கமாக கூறவில்லை.

ஏற்கெனவே, நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com