உலகம்
ஆப்கனிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மூன்று கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கொல்லப்பட்ட துயரம் நேர்ந்துள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் சிப்கத்துல்லா, ஹாரூண், கபீர் ஆகா ஆகிய மூவரும்தான் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
கிரிக்கெட் வாரிய அலுவலகத்தைக் குறிவைத்து பாகிஸ்தான் படை தாக்குதல் நடத்தியதாக ஆப்கனை ஆளும் தாலிபான் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல் என்று ஆப்கானிஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது.
தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று ஆப்கன் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.