பிராமணர்கள்...டிரம்ப் ஆலோசகரின் சர்ச்சை பேச்சு!

டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ
டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ
Published on

இந்தியர்களின் செலவுகள், இழப்புகளால் பிராமணர்கள் மட்டுமே லாபமடைகின்றனர் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றம்சாட்டியுள்ளார்.

Fox News ஊடகத்துக்கு பீட்டர் நவரோ இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

“இந்தியா வரிகளின் மகாராஜாவாக இருக்கிறது. அதனால்தான் 25%, 50% என வரிகள் விதிக்கப்படுகின்றன. உலகத்திலேயே மிக அதிகமான வரிகளை விதிப்பது இந்தியாதான்.

இந்திய பொருட்கள் விற்பனையால் அமெரிக்காவின் உழைக்கும் தொழிலாளர்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் வரி செலுத்துகிற உக்ரேனியர்கள், ரஷ்யாவின் டிரோன்களால் கொல்லப்படுகின்றனர். பிரதமர் மோடி சிறந்த தலைவர்தான். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரான மோடி ஏன் ரஷ்யா அதிபர் புதின், சீனா அதிபர் ஜி ஜின்பிங்குடன் நெருக்கம் காட்டுகிறார்?

இந்திய மக்களுக்கு மிக எளிமையாகவே ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

இந்திய மக்களின் செலவுகளால்- இழப்புகளால் பிராமணர்கள்தான் லாபமடைகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்தவே அமெரிக்கா விரும்புகிறது.

அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக, சமநிலையற்ற வர்த்தகத்தையும் புவிசார் அரசியல் கூட்டணிகளையும் உருவாக்குகிறது இந்தியா.” இவ்வாறு பீட்டர் நவரோ தெரிவித்தார்.

அவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com