அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, டிரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவுக்கு உள்ளானது.
அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் - ஒரு பார்வை:
1) டிரம்பின் குடியரசுக் கட்சியின் வசமிருந்த வட கரோலினா செனட் தொகுதியை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ராய் கூப்பர் கைப்பற்றினார். குடியரசுக் கட்சியிடமிருந்து ஜனநாயகக் கட்சி கைப்பற்றிய முதல் செனட் தொகுதி இதுவாகும்.
2) நியூ ஹாம்சயர் மாகாண செனட் தொகுதியை முதன்முதலாக ஜனநாயகக் கட்சியின் தன்பாலின ஈர்ப்பாளரான கிறிஸ் பாப்பாஸ் கைப்பற்றியுள்ளார்.
3) கடந்த 1932ஆம் ஆண்டு முதல் 94 ஆண்டுகளாக குடியரசுக் கட்சியின் வசமிருந்த கன்சாஸ் மாகாணத்தை ஜனநாயகக் கட்சியின் ஹாமில்டன் கைப்பற்றினார்.
4) ஜார்ஜியா மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியின் கேஷா லான்ஸ், அமெரிக்க வரலாற்றில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பினப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
5) தேர்தல் பிரச்சாரங்களுக்காக ரூ.1,900 கோடி செலவழித்த எலான் மஸ்க்கின் பணபலத்தையும் மீறி, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜேம்ஸ் தாலரிகோ டெக்சாஸ் செனட் தேர்தலில் அபார வெற்றிப் பெற்றுள்ளார்.
6) அமெரிக்க செனட் சபைக்குத் தேர்வான முதல் முஸ்லிம் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஜனநாயகக் கட்சியின் எகிப்து வம்சாவளியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத்.