ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் - இந்தியா ஆதரவு!

ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் - இந்தியா ஆதரவு!
Published on

மேற்கு ஆசிய நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் 135 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிறைவேறிய நிலையில், சீனாவும், ரஷியாவும் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் மீது ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. விமான நிலையங்கள் உட்பட பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் சில ஏவுகணைகள் விழுந்ததால் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தில், “மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதலையும், ஹார்மூஸ் நீரிணையை மூடி கடல்சார் வர்த்தகத்தில் தலையிடுவதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா உள்பட 135 நாடுகள் ஆதரவளித்ததை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பை புறக்கணித்த சீனா, “இந்த மோதலின் உண்மையான காரணத்தை தீர்மானம் பிரதிபலிக்கவில்லை” என்று தெரிவித்தது. ரஷியாவும் ஒருதலைப்பட்சமான தீர்மானம் என்று விமர்சித்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com