அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது 25 மாகாணங்கள் வழக்கு!

America president Trumph
அமெரிக்க அதிபர் டிரம்ப்
Published on

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசுக்கு எதிராக, அமெரிக்காவின் 25 மாகாணங்கள் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

வழக்கு தொடுத்ததற்கான முக்கிய காரணமாக சுங்க வரி உயர்வு, வர்த்தகச் சட்டம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை வழக்குத் தொடுத்த மாகாணங்கள் கூறுகின்றன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு உலக நாடுகள் மீதும் அதிக வரிகளை விதித்துவருகிறார்.

கட்டாய உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது கடந்த மாதம் வரி விதித்தார். இதில், இந்தியா உட்பட 59 நாடுகள் அடங்கும்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 25 மாகாணங்கள் இணைந்து சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில் டிரம்ப் அரசு செயல்பட்டு வருவதாகவும், வசூலிக்கப்பட்ட வரியை டிரம்ப் அரசு திரும்ப வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடுத்த மாகாணங்கள் தெரிவித்துள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com