அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்ட வெனிசுலா அதிபர்!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ
Published on

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிள்ளன.

போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க படைகள் நேற்று அதிகாலை பெரும் வான்வழித் தாக்குதலை நடத்தின.

இந்தத் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தன.

அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட வேண்டும் என்று துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வலியுறுத்திய நிலையில், அமெரிக்க ராணுவத்தின் பிடியில் அதிபர் மதுரோ இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.

அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் விமானம் தரையிறங்கியது.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் மதுரோவும், அவரது மனைவியையும் சிறைக்கு அழைத்து செல்லும் வீடியோவை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

வெனிசுலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெனிசுலாவின் நிர்வாகத் தொடர்ச்சிக்கும், விரிவான பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிப்பதற்காக துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸை இடைக்கால அதிபராக நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com