இரா.சம்பந்தன்
இரா.சம்பந்தன்

இலங்கையின் மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் காலமானார்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 91.

இரா. சம்பந்தன் வயது மூப்பு காரணமான, உடல் நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வந்தவர் இரா. சம்பந்தன். இவர் இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவராகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வந்தவர். மேலும், பல ஆண்டுகள் எம்பியாகவும் இருந்தவர். 2015 முதல் 2018ஆம் ஆண்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com