சல்வார்கமிஸில் சுவிஸ் வெய்ட்டர்கள்
சல்வார்கமிஸில் சுவிஸ் வெய்ட்டர்கள்

சல்வார்கமிஸில் சுவிஸ் வெய்ட்டர்கள்... இன்ஸ்டாவில் வைரல்!

இந்தியாவுக்கு வரும் மேலை நாட்டவர் அரைக் கால் டவுசரும் அரைகுறை மேலாடையுமாக இயல்பாக இருக்க, சுவிட்சர்லாந்து நாட்டிலோ ஓட்டல் பணியாளர்கள் சல்வார் கமிஸ் உடையுடன் வேலையில் அசத்துகிறார்கள். இதுகுறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் தீயாய்ப் பரவிவருகிறது. 

ஜெர்மனில் வசிக்கும் இந்தியத் தம்பதியருக்காக எனக் கூறி, சோல்மேட் எக்ஸ்பிரஸ் என்ற பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்கள். 

அந்தப் பதிவில், “ இந்தியாவில் இருக்கும் இந்தியர்களைவிட சுவிட்சர்லாந்தில் அருமையான இந்தியர்களின் காட்சியைக் கண்டேன். ஐரோப்பாவுக்குள் இருக்கும் பெரும்பாலான இந்திய உணவகங்களுக்குச் சென்றால், கலாச்சார டைம் மிசினுக்குள் செல்வதைப் போல இருக்கிறது. எவ்வளவு மதிப்புமிக்க பாரம்பரியமும் அதிரவைக்கும் உள் அலங்காரமும் அங்கு மிளிர்கின்றன.” என்று குறிப்பிட்ட இன்ஸ்டா பக்கத்தில் பாராட்டு மழை பொழிந்துள்ளனர். 

அந்தக் காணொலியில், துள்ளலான இந்திப் பாடல் இசைக்கப்படும் பின்னணியில், உயரமான பெண் ஒருவர் சல்வார் கமிஸ் உடையில் வாடிக்கையாளர்களுக்கான உணவு சேவையில் மும்முரமாக இருக்கிறார். அவரைப் படம்பிடிப்பதை அறிந்ததும் சிரித்துக்கொண்டே தலையசைத்தபடி தன்னுடைய வேலையைத் தொடர்கிறார். அவரையடுத்து இன்னொரு பணிப்பெண்ணும் அதே உடையில் வேலையில் அசத்துகிறார். 

இந்த வீடியோ பதிவுக்கான பதிலில், பலரும் இந்தியப் பாரம்பரியத்தைப் பற்றி ஆகா ஒகோவெனப் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com