காஸாவில் போர்நி றுத்தம் எப்போது? டிரம்ப் புதிய தகவல்!

அதிபர் டொனால்ட் டிரம்ப்
அதிபர் டொனால்ட் டிரம்ப்
Published on

காஸாவிலிருந்து முதல் கட்டமாக பின்வாங்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த முடிவு ஹமாஸிடமும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஹமாஸ் இதற்கு ஒப்புக்கொண்ட உடனே போர்நிறுத்தம் அமலுக்கு வருமென்றும் பணயக் கைதிகள் மற்றும் சிறைவாசிகளை இரு தரப்பும் பரிமாற்றிக்கொள்வது தொடங்கும் என்றும் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதோடு, காஸாவிலிருந்து இரண்டாம் கட்டமாக இஸ்ரேல் வெளியேறுவதற்கான நிபந்தனைகளையும் தான் தயார் செய்வதாக டிரம்ப் கூறியுள்ளார்.

"இந்த பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கி நம்மை அது அழைத்துச் செல்லும்," என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மற்றுமொரு சமூக ஊடகப் பதிவில், பணயக் கைதிகளை விடுவித்து அமைதி ஒப்பந்தத்தை முழுமை செய்வதற்காக இஸ்ரேல், காஸாவில் குண்டுவீசுவதை நிறுத்தியுள்ளது என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தத்தில் உள்ள பணயக் கைதிகள் விடுதலை உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ள ஹமாஸ், சில முக்கியமான விஷயங்கள் பற்றி மேலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com