ஒரே வாக்கியத்தில் முழு நாவலையும் எழுதியவருக்குஇலக்கிய நோபல் பரிசு!

400 பக்க நாவலை ஒரே நீ....ள வாக்கியமாக எழுதியவர்.
எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹேர்காய்
எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹேர்காய்
Published on

2025ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹேர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்.6ஆம் தேதி முதல் நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை (அக்.6) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அக்.7 ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. நேற்று(அக்.8) வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹேர்காய்-க்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ்லோ நீளமான வாக்கியங்களை எழுதக்கூடியவர். எந்த அளவுக்கு என்றால் அதிர்ந்துபோவோம். Herscht 07769 என்ற அவரது நாவல் ஆங்கிலத்தில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியானது. 400 பக்கங்களைக் கொண்டது. முழு நாவலுமே ஒற்றை வாக்கியத்தால் ஆனது. கமா போட்டு எழுதிக்கொண்டே போயிருக்கிறார் இந்த நோபல் எழுத்தாளர்.

பயங்கரவாத பேரழிவுக்கு மத்தியில் கலையின் வீச்சை மறு உறுதி செய்யும் வகையிலும் தொலைநோக்கு பார்வையிலும் படைப்புகளை எழுதியுள்ளதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும நாளையும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.13-ஆம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளன.

ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் நோபல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com