2026 ஆசிய தொடர் ஓட்டத்தில் சீனாவை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம்!

India won gold medal
தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம்
Published on

ஆசிய தொடர் ஓட்டப் போட்டியில், இந்திய மகளிர் அணி சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.  

இந்திய மகளிர் அணி  4x100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் 43.85 வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஸ்ரபானி நந்தா, எஸ்.எஸ். சினேகா, சுதேஷ்னா சிவண்கர், தமன்னா ஆகிய நால்வர் குழு இந்திய மகளிர் அணியின் சார்பாக இப்போட்டியில் பங்கேற்றது. இந்த அணிக்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் மார்ட்டின் ஓவன்ஸ் பயிற்சி அளித்துள்ளார்.

இந்தப் போட்டியில் , 44.09 வினாடிகளுடன் சீனா வெள்ளிப் பதக்கத்தையும், 44.11 வினாடிகளில் தாய்லாந்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளது.

இதேபோல், கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இதில் தீர்த்தேஷ் பி ஷெட்டி, எம்.ஆர். பூவம்மா, பரத் ஸ்ரீதர், நீரு பதக் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 3:17.06 நிமிடங்களுடன் வியட்நாம் முதலிடத்தைப் பிடித்தது.

கலப்பு 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் நடப்பு ஆண்டிற்கான ஆசிய தொடர் ஓட்டப் போட்டியை நிறைவு செய்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com