இலங்கையில் 3ஆம் நாளாக ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை இரயில் ஓட்டுநர் போராட்டம்
இலங்கை இரயில் ஓட்டுநர் போராட்டம்
Published on

இலங்கையில் இரயில் ஓட்டுநர் பணிக்கு புதிதாக ஆளெடுப்பு நடத்தாமை உட்பட்ட பல காரணங்களால் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மூன்றாவது நாளாக அவர்கள் இன்றும் வேலையைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

இரண்டு இரயில் முனையங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

இவர்களின் போராட்டம் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட தொடர்வண்டி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

போராட்டம் தொடரும் என்றாலும், நீண்ட தொலைவு, இரவுநேர அஞ்சல் தொடர்வண்டிச் சேவைகள் பாதிக்காது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்குவதற்காக ஓய்வுபெற்ற ஓட்டுநர்களைப் பணியில் ஈடுபடுத்த தொடர்வண்டித் துறை பொது மேலாளர் பொல்வத்தகே ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com