நெதன்யாகுவை எதிர்த்து இஸ்ரேலில் தெருவில் இறங்கிய மக்கள்!

நெதன்யாகுவை எதிர்த்து இஸ்ரேலில் தெருவில் இறங்கிய மக்கள்!
Published on: 

இஸ்ரேல் பிரதமர் பதவியிலிருந்து நெதன்யாகு உடனடியாக விலகவேண்டும் என வலியுறுத்தி அந்நாட்டின் ஐந்து முக்கியமான நகரங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி போராடிவருகின்றனர்.

அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணி மொத்தமுள்ள 120 இடங்களில் 53 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. மீதமுள்ள 67 இடங்களிலும் எதிர்க்கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.

முக்கிய எதிர்க்கட்சியான இன்னொரு யூதக் கட்சியும் அரபுக் கட்சிகளும் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா, பீர்சேபா, தைபே ஆகிய நகரங்களில் ஸ்டாண்டிங் டுகெதர் எனும் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் மக்கள் ஏராளமான அளவில் கலந்துகொண்டுவருகின்றனர்.