மீண்டும் சேர்ந்த நண்பர்கள்… அருகருகே அமர்ந்திருந்த டிரம்ப் – மஸ்க்!

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க்
டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க்
Published on

சுட்டுக் கொல்லப்பட்ட சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நீண்ட நாள்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொழிலதிபர் எலான் மஸ்க்கும் அருகருகே அமர்ந்து உரையாடிய நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளர், நண்பர் சார்லி கிர்க். உட்டா பல்கலை.யில் நிகழ்ச்சி ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மரணம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 22 வயது வாலிபர் டைலர் ராபின்சன் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சார்லி கிர்க்கின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்பும், தொழிலதிபர் மஸ்க்கும் அருகருகே அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒருவரையொருவர் பொதுவெளியில் விமர்சித்துக் கொண்ட நிலையில், கிர்க் நிகழ்ச்சியில் கைகுலுக்கியபடி உரையாடிய புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

டிரம்புடன் பேசியபடி அமர்ந்திருக்கும் இந்த புகைப்படத்தை எலான் மஸ்க் தமது எக்ஸ் ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com