கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள  மியாசாகி மாம்பழம்
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள மியாசாகி மாம்பழம்

உலகின் விலை உயர்ந்த மாம்பழம்!

பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழம், உலக மக்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட பெருங்கொடை!. இது மாம்பழம் சீசன் என்பதால்  நம்மூர் மாம்பழங்கள் சல்லீசான விலைக்கு கிடைக்கலாம். ஆனால், ஜப்பானைச் சேர்ந்த மாம்பழம் ஒன்று அப்படிக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரத்தில், 1970களின் பிற்பகுதியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது, இந்த விலை உயர்ந்த மியாசாகி மாம்பழம். இது கிலோவுக்கு எவ்வளவு விற்கப்படுகிறது தெரியுமா? தெரிந்தால் வாயடைத்துப் போவீர்கள்! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை 2.75 லட்சம் ரூபாய் ஆகும். மியாசாகி நகரின் பெயரே மாம்பழத்துக்கும் வைத்துள்ளனர் ஜப்பான்காரர்கள்.

தற்போது அந்த மாம்பழமானது, மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வரும் மாம்பழ கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 262 வகையான மாம்பழங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டாலும், மக்கள் கூட்டம் என்னவோ, மியாசாகி மாம்பழத்தை சுற்றித்தான் ஈ போல மொய்க்கிறார்களாம்! அதுவும் பத்து மாம்பழம் மட்டுமே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மியாசாகி மாம்பழம் ஏறக்குறைய 350 கிராம் எடையுடையது. இதில் 15 சதவீதம் சர்க்கரை உள்ளது. கண் பார்வைக்கு உகந்ததாக இந்த மாம்பழத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஜப்பான், இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இந்த மாம்பழமானது உற்பத்தி செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com