டூரிஸ்ட் ஃபேமலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் தங்களது எக்ஸ் பதிவுகளில் பாராட்டி இருந்தார்கள்.
இந்நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் படக்குழுவுடன் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது:
நான் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கான காரணம் இன்று முழுமை அடைந்தது. அவர் என்னுடைய பெயரை அழைத்த விதமும் கட்டியணைத்ததும் புல்லரிக்க வைத்தது.
நான் சிறிய வயதில் பிரார்த்தனை செய்த அத்தனைக்கும் அவரது சிரிப்பு ஒன்றே போதுமென இருந்தது. சிறிது தாமதமாக நடந்தாலும் எனக்கு தேவைப்பட்டபோது நடந்தது.
என்ன மாதிரியான ஒரு மனிதர். எளிமை, தலைசிறந்தவர் என்பதற்கு உதாரணம் ரஜினி சார். இதைவிட பெரிய ஊக்கமும் ஆசீர்வாதமும் கிடைக்கப்போவதில்லை. எப்போதும் உங்களை நேசிக்கிறேன் தலைவா ரஜினி சார்.” எனக் கூறியுள்ளார்.