மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது! - விஜய்

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கோவயில் நேற்று நடைபெற்ற தவெக பூத் கமிட்டி மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், கோவை என்றாலும், கொங்குப் பகுதி என்றாலும் இந்த மண் மற்றும் மக்களின் மரியாதைதான் ஞாபகத்திற்கு வரும். பேரு தான் பூத் லெவல் ஏஜெண்ட் பயிற்சி பட்டறை. ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால் வேறு ஏதோ விழா நடப்பது போன்று இருக்கிறது. மக்களிடம் நம்பிக்கை கொண்டுவரப்போவதே நீங்கள்தான். மக்களிடம் வாக்கு எப்படி வாங்கப் போகிறோம் என்பதற்கான பட்டறை இல்லை.

மக்களோடு மக்களாக பழக வேண்டும் என்பதற்கான பட்டறை. ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பதே மக்களின் நலனுக்காக மட்டுமே. மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது. உங்களிடம் என்ன இல்லை? பேச உண்மை உள்ளது. கறை படியாத கை உள்ளது. உங்களுடைய ஆற்றல் எனக்குத் தெரியும். அர்ப்பணிப்பு மிக்க குணம் இருக்கிறது. நேர்மை, நம்பிக்கை, லட்சியம், உழைக்கும் தெம்பிருக்கிறது.

களம் தயாராக இருக்கிறது. களத்தில் எதிர்கொள்ள துணிச்சல் இருக்கிறது. மக்களிடம் செல்லுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com