அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சு- அமித் ஷா உறுதிப்படுத்தினார்!

அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சு- அமித் ஷா உறுதிப்படுத்தினார்!

Published on

அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கடந்த தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் என்ன நிலை எடுக்கும் என்பது கேள்வியாக இருந்துவந்தது. 

இந்ஹச் சூழலில் திடீரென தில்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, கடந்த 25ஆம் தேதி மாலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தம்பிதுரை, கே.பி. முனுசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஆகியோரும் உடனிருந்தனர். 

அந்தச் சந்திப்பில் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று எடப்பாடி கூறியிருந்தார். ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாகப் பேசப்பட்டு வருகிறது என்றும் உரிய நேரத்தில் அதைப் பற்றி தெரிவிக்கப்படும் என்றும் அமித்ஷா இன்று விசயத்தைப் போட்டு உடைத்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com