செய்திகள்
அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கிவைக்கப்பட்டுள்ளன.
பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்படி மத்திய அமலாக்கத் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக, இது தொடர்பான வழக்கில் அனிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவருக்குச் சொந்தமான இடங்களில் தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது.
அவரின் சொந்த ஊர் அமைந்துள்ல தூத்துக்குடி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள அசையா சொத்துகளில் 1.26 கோடி ரூபாய் மதிப்பிலானவை முடக்கிவைக்கப்படுவதாக இன்று அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.