அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை – தமிழ்நாடு அரசு!

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை – தமிழ்நாடு அரசு!
Published on

தமிழ்நாடு அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமைக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பெற்றோர் இரண்டு பேரையும் இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அரசாணையில், அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றுக்கு பெற்றோர் இருவரையும் இழந்து தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவதற்கான விளக்கமான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com