ஆயிரக்கணக்கான கோடிகளில் புதிய சாலைகள், பாலங்கள்!

ஆயிரக்கணக்கான கோடிகளில் புதிய சாலைகள், பாலங்கள்!
Published on

சேலம் ஆத்தூர் நகர், ஓசூர் மாநகருக்குப் புறவழிச் சாலைகள் ரூ.550 கோடியில்  அமைக்கப்படும்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, ரூ.180 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூர் மாநகரில் ஏற்படும் கனரக வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்விதத்தில் ரூ.370 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

ஆறுகளின் குறுக்காக தங்குத் தடையற்ற பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய 6 உயர்மட்டப் பாலங்கள் ரூ.295 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.

இராணிப்பேட்டையில் விருத்தகசீரக ஆற்றின் குறுக்கே (தண்டலம் - பேரம்பாக்கம் - தக்கோலம் -அருகில்பாடி சாலையில்) பாலம்,

தஞ்சாவூரில் வெண்ணாற்றின் குறுக்கே (திருக்காட்டுப்பள்ளி - செங்கிப்பட்டி - பட்டுக்கோட்டை சாலையில்) பாலம்,

திருச்சியில் கோரையாற்றின் குறுக்கே (திருச்சி - மேலூர் - மதுரை சாலையில்) பாலம்,

ஆத்துப் பொள்ளாச்சியில் ஆழியாற்றின் குறுக்கே (ஆத்துப் பொள்ளாச்சி - காளியப்பன் கவுண்டன் புதூர் சாலையில்) பாலம்,

செவிலிமேட்டில் பாலாற்றின் குறுக்கே   (காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில்) பாலம்,

திருக்கோவிலூர் அரங்கண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் ஆகிய ஆறு உயர்மட்டப் பாலங்கள் ரூ.295 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.

இரயில்வே கடவுகளுக்கு மாற்றாக 10 இரயில்வே மேம்பாலங்கள் / ஒரு கீழ்பாலம் ரூ.787 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

 மேம்பாலங்கள்;

மதுரையில் பழங்காநத்தம் அருகில்,  இரயில்வே கடவு எண்.4A,

நாகர்கோயில் மாவட்டத்தில் காவல்கிணறு - இராதாபுரம் சாலையில் இரயில்வே கடவு எண்.74B

விருதுநகர் மாவாட்டம், திருத்தங்கலில் இரயில்வே கடவு  எண் 424,

திண்டுக்கல் மாவட்டத்தில், பழனியில் இரயில்வே கடவு  எண்.63,

திருவண்ணாமலையில் ரயில்வே கடவு எண்.56,

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இரயில்வே மேம்பாலம்

சென்னை, அம்பத்தூரில் உள்ள இரயில்வே மேம்பாலத்தினை அகலப்படுத்துதல்.

மறைமலைநகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடவு எண்.45

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயிலில் உள்ள கடவு  எண்.49,

மேல்மருவத்தூர் அருகில் உள்ள இரயில்வே கடவு  எண்.74.

கீழ் பாலம்:

சேலம் - கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் (RUB/528) இரயில்வே கீழ்பாலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் பின்தங்கிய பகுதியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த  வெள்ளிமலை - சின்னதிருப்பதி சாலை கி.மீ. 0/0-32/740 வரையுள்ள ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட இதர சாலையாக ரூ.98.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டும் சுற்றுலா பயணிகளின் வசதியான போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக 10 கி.மீ. நீள ஊராட்சி ஒன்றிய சாலைகளை, இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தி ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com