செய்திகள்
ஆளுநர் பதவி நீக்கப்படும்வரை அரசியல்மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காக்க நடத்தை விதிகள் உருவாக்கப்பட வேண்டும் எனப் பேசவுள்ளதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் இதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளைத் திருத்துவதைக் கண்டித்து பிப்ரவரி 6ஆம் தேதி போராட்டம் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாணவரணி சார்பில் தமிழகத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியிலும் போராட்டம் நடத்துவார்கள் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.