ஆளுநர் அளிக்கும் குடியரசு நாள்
விருந்தைப் புறக்கணிப்போம் என்று
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
” தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.இரவி பொறுப்பு ஏற்றதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து வருகிறார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன் வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுகிறார்.
இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை பரப்புரை செய்யும் முகவராக இயங்கி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதிக்கும் ஆர்.என்.இரவி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை ம.தி.மு.க. தொடந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் ஜனவரி 26 குடியரசு நாளில் நடைபெறும் நிகழ்வை ம.தி.மு.க. புறக்கணிக்கிறது.” என்று வைகோ கூறியுள்ளார்.