செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர் பூர்ணம் குமார் ஷா கடந்த மாதம் 23ஆம் தேதி வழிதவறி பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றுவிட்டார்.
அவரை அந்நாட்டு இராணுவம் கைதுசெய்து வைத்திருந்தது. அவரை விடுவிக்க வேண்டுமென இந்தியத் தரப்பில் கோரிக்கை விடப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஆயுத மோதல் உருவானது.
அமெரிக்கத் தலையீட்டில் மத்தியஸ்தம் உருவானதையடுத்து, கைதான எல்லைப் படை வீரரை அந்நாட்டு அரசு இன்று விடுதலை செய்தது.
அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டாரி எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் இன்று ஒப்படைத்தனர்.