இன்றே பிறந்தநாள் களை... ஸ்டாலினுக்கு வரிசையாக நேரில் வாழ்த்து!

இன்றே பிறந்தநாள் களை... ஸ்டாலினுக்கு வரிசையாக நேரில் வாழ்த்து!
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள் நாளை மார்ச் ஒன்றாம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆளும் கட்சியாக தி.மு.க. வந்துவிட்டால் மாநிலம் முழுவதும் பிறந்த நாள் விழா களைகட்டும். 

இந்த ஆண்டும் எல்லா மாவட்டங்களிலும் சுவரொட்டிகள், பேனர்கள், தோரணங்கள் என சாலைகள் முழுவதும் கருப்புவண்ண மயமாக நிரம்பியபடி இருக்கின்றன. 

இந்நிலையில் இன்றே முதலமைச்சருக்கு பல தரப்பினரும் நேரில் வாழ்த்துத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். 

சிவ மடாதிபதிகள் மயிலம் பொம்மபுரம் சிவஞான பாலய சாமி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிரவை குமரகுரு சாமி, திருவாவடுதுறை அம்பலவாண தேசிக பரமாச்சார்யா சாமி, திருப்பெரும்புதூர் ராமானுஜ எம்பார் ஜீயர் ஆகியோர் முதலமைச்சரை நேரில் வாழ்த்தினர்.

தமிழ்நாட்டு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உட்பட உயர் காவல் அதிகாரிகள் முதலமைச்சரை அவரின் இல்லத்தில் நேரில் வாழ்த்தினர்.

டிவிஎஸ் தொழில் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசனும் முதலமைச்சரின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

முன்னதாக, தலைமைச்செயலாளர் முருகானந்தம் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி புத்தகப் பரிசும் அளித்தார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வுகளில் முக்கியமான நிகழ்வாக, மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் சார்பில் முதலமைச்சர் இல்லத்துக்கு வாழ்த்தச் சென்றிருந்தனர். அப்போது வீட்டுக்கு உள்ளேயிருந்து முதலமைச்சர் ஸ்டாலினே அவர்களை வாசலுக்கு வந்து வரவேற்றார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் தரப்படும் என அறிவித்ததற்கு அவர்கள் தனியாக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com