இலங்கை அரசின் முன்னாள் அதிபர் இராஜபக்சேவின் இளைய மகன் யோசித இராஜபக்சே, கடற்படையில் பணிபுரிந்துவந்தார். தந்தை மகிந்த இராஜபக்சே, சிற்றப்பா கோட்டாபய இராஜபக்சே ஆட்சிக் காலங்களில் அளவுக்கதிகமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக இவர் மீது புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, பண மோசடிக் குற்றச்சாட்டில் இவர் வகையாகச் சிக்கிக்கொண்டார். இதுதொடர்பான வழக்கில் யோசிதாவுக்குத் தொடர்பு இருக்கிறது என கொழும்பு நீதிமன்றம் உறுதிசெய்தது.
அதைத் தொடர்ந்து பெலியத்த எனும் பகுதியில் வைத்து, இலங்கை காவல்துறையினர் இன்று யோசிதாவைக் கைதுசெய்தனர்.
குற்றப்புலனாய்வுத் துறை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னாள் அதிபர்களின் பாதுகாப்பைக் கடுமையாகக் குறைத்த புதிய அதிபர் அனுர குமாரா திசநாயக்கா, முன்னாள் அதிபர் எனும் கோதாவில் இருந்துவரும் மகிந்த இராஜபக்சே வசித்துவரும் பங்களாவைக் காலிசெய்யவும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.
இந்த நிலையில், இந்தக் கைது அரங்கேறியுள்ளது.