புதுக் கூட்டணியா... இராமதாசுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு!

புதுக் கூட்டணியா... இராமதாசுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு!
Published on

பா.ம.க. நிறுவனர் இராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சந்தித்துப் பேசினார். 

தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, இது மரியாதைநிமித்தமான சந்திப்பு; அரசியல் பேசவில்லை என்று கூறினார்.

அன்புமணி கூறுவதைப் போல பா.ம.க.வுக்குள் பிரச்னை ஏற்படுத்துவதற்கான தேவை தி.மு.க.வுக்கு எதுவும் இல்லை; அவர் புரிதலின்றிப் பேசுகிறார் என்றார்.

கூட்டணியில் இராமதாசின் பா.ம.க. வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என மூன்று முறை செய்தியாளர்கள் மாறிமாறிக் கேட்டனர். அதற்கு, ஒரு முறை உச்சஸ்தாயிக்குப் போய், ”ஏம்பா கூட்டணியப் பத்தி பேசவே வரலையே... நலம் விசாரிக்கத்தான் வந்தேன் என்கிறேன். கூட்டணியைப் பற்றி என்னிடம் கேட்டால்..” என இலேசாகக் கோபப்பட்டார், செல்வப்பெருந்தகை.

கூட்டணிக்கு பா.ம.க.வருவதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின்தான் தீர்மானிப்பார்; அவர் முடிவுபண்ணிட்டா நாங்க என்ன செய்யமுடியும்? என்றும் அவர் கூறினார்.

அதிக தொகுதிகள் வேண்டும் என பல காங்கிரஸ்காரர்கள் கூறுவது அதிகாரபூர்வமானது அல்ல; நான் கூறுவதுகூட தலைமையின் ஒப்புதலோடுதான் சொல்லமுடியும் என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com