இரண்டாவது ஆண்டாக நீடித்துவரும் உக்ரைன் - ரசியா போர் தொடர்பாக, சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்கா, ரசிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சவுதியின் முன்னெடுப்பில் நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை நான்கு மணி நேரம் நீடித்தது. பேச்சு சுமுகமாக இருந்தது என ரசிய அரசின் தரப்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் தரப்பில் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, ரசியாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜிலாவ்ரோவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பேச்சில் பங்கேற்க தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேச்சின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர ரசியா முனைகிறதா என ஆய்வதற்கான முதல் படி என்று அமெரிக்கா கூறியுள்ளது. ரசியாவோ இதன் மூலம் அமெரிக்காவுடனான உறவை நன்றாகப் பேணமுடியும் என நினைப்பதாக அந்நாட்டுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.