என்கூட அ.தி.மு.க. கூட்டணி பேசியது - சீமான் பகிரங்கத் தகவல்!

சீமான்
சீமான்
Published on

அ.தி.மு.க. சார்பில் தன்னுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக நா.த.க. தலைவர் சீமான் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். 

கட்சி தொடங்கியது முதலே தனியாகப் போட்டியிடுவதுதான் தன்னுடைய கொள்கை எனப் பேசிவரும் சீமான், குறிப்பாக இந்திய, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என்று அழுத்தமாகக் கூறிவந்தார். 

இந்தப் பின்னணியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சீமானுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துப் பேசிவருவதாக அண்மைய மாதங்களாகவே தகவல்கள் வெளியாகின. ஆனால் தான் யாருடனும் சேர்ந்து போட்டியிடப் போவதில்லை என்ற சீமான், அமெரிக்க அதிபர் டிரம்புடனா இரசிய அதிபர் புட்டினுடனா என கூட்டணிக்கு யோசிப்பதாகக் கிண்டலாகக்கூறி அவருக்கே உரித்தான அமர்க்கள சிரிப்பாகச் சிரித்தார். 

இன்று சென்னையில் போயஸ் தோட்டப் பகுதியில் தினத்தந்தி முன்னாள் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் இல்லத்தில் மலரஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, விஜய்க்கு துணைமுதல்வர் பதவி அளிக்கப்படாததால் அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டு சேரவில்லை என ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், முன்னத்தி ஏரான தன்னுடன் பேசியதைப் போலவே விஜயிடமும் பேசியிருக்கவேண்டும் என போகிறபோக்கில் கூறினார். 

தொகுதிகளின் எண்ணிக்கை, துணைமுதல்வர் போன்றதைத்தான் அ.தி.மு.க. பேசியிருக்கும் என அவர் நம்பிக்கையோடு சொன்னார். 

துணைமுதலமைச்சர் பதவியைத் தரமுடியாது என அ.தி.மு.க. சொல்லியிருக்காது என்றும் சீமான் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com