மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கி நடித்து அண்மையில் வெளியான படம், எம்புரான். இந்தப் படத்தில் சர்ச்சையான காட்சிகள் இருந்ததாகக் கூறி இந்துத்துவ மதவாதிகளும் தமிழ் இன உரிமைவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு எதிரொலியாக படத்தின் காட்சிகளில் வெட்டி, மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து படத்தைத் தயாரித்த கோகுலம் சீட்டு நிறுவனத்தில் நேற்று வரிச் சோதனை நடத்தப்பட்டது.
அந்தச் சோதனையின் சுவடுகூட அழியாத நிலையில், இன்று பிருத்விராஜுக்கு வருமான வரித் துறை விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, கோல்டு, ஜனகனமன, கடுவா ஆகிய படங்களின் தயாரிப்பில் பிருத்விராஜ் இணைத் தயாரிப்பாளராக இருந்ததால், அதையொட்டியே இந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது, இணைத் தயாரிப்பாளர் எனும் வகையில் 40 கோடி ரூபாய் வருமானம் பெற்றதாகவும் அதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.