தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை இருக்கலாம் என்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
தலைநகர் சென்னை, அதன் சுற்றுவட்டாரத்தில் இலேசான அளவுக்கு மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மழைக்குப் பின்னர் 7ஆம் தேதிக்குப் பிறகு 11ஆம் தேதிவரை இலேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றாலும், வெயிலின் அளவு 2-3 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.