செய்திகள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தின் சூடு இன்னும் தணியாதநிலையில், ஐஐடியில் படித்துவரும் மாணவிக்கு பாலியல் வதை இழைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில் ஐஐடி வளாகத்துக்கு உள்ளே குறிப்பிட்ட மாணவி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் இளைஞன் ஒருவன் சீண்டல் வதையில் ஈடுபட்டுள்ளான் என்று கூறப்படுகிறது.
அவன் ஐஐடி வளாகத்தில் உள்ள உணவகப் பணியாளர் ரோசன் என்பதுதெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து அந்த மாணவி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதையடுத்து, காவல்துறையினர் ரோசனைக் கைதுசெய்துள்ளனர்.
அவனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.