கலைஞரின் எழுத்தை படித்துதான் 
‘பொ. செ.’ வசனங்களை பேசினேன்: திமுக மேடையில் ஜெயம் ரவி!

கலைஞரின் எழுத்தை படித்துதான் ‘பொ. செ.’ வசனங்களை பேசினேன்: திமுக மேடையில் ஜெயம் ரவி!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் "கலையின் சாதனை கலைஞர், காலம் வியக்கின்ற தலைவர்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி, நடிகர் எம்எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி, "கலைஞர் தற்போது இல்லை என்றாலும், அவரின் கருத்துகள் என்றும் நிலைத்து நின்று கொண்டு இருக்கிறது. நான் இங்கு கட்சி சார்ந்து இல்லாமல், கலை சார்ந்து வந்துள்ளேன். இருப்பினும் சினிமா என்ற கட்சி சார்ந்தே வந்துள்ளேன். கலைஞரின் முதல் கட்சியே சினிமா தான்.

கலைஞர் கையால் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வாங்கியது மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள். நான் பொன்னியின் செல்வன் படத்தில் செந்தமிழ் பேச வேண்டும் என்ற போது, கலைஞரின் எழுத்துகள், வசனங்கள் படித்து தான் நான் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தேன்.

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்றால், கலைஞரை பொறுத்தவரை ஒரு சோறு என்றால் அது பராசக்தி தான். பராசக்தி படத்தில் அரசியல், சமூகம், சமூக அரசியல் என அனைத்தும் இருந்தது. பராசக்தி படம் குறித்தே இந்த நிகழ்ச்சி முழுவதும் பேசலாம்.

போகும் போது யாரும் எதையும் எடுத்து செல்ல முடியாது. ஆனால் கலைஞர் போகும் போது பேனாவை உடன் எடுத்து சென்றுள்ளார். வானில் அவர் தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறார். கலைஞரின் வளர்ப்பு எப்படி உள்ளது என்று முதலமைச்சரை பார்த்தால் தெரியும்." என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com