காங்கிரஸ் கட்சிக்குள் பா.ஜ.க. கைகள்- இராகுல்காந்தி அதிர்ச்சிக் குற்றச்சாட்டு!

இராகுல்காந்தி
இராகுல்காந்தி
Published on

காங்கிரஸ் கட்சிக்குள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகச் செயல்படும் தலைவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் தாங்களாகவே வெளியே வரவேண்டும் என இராகுல்காந்தி கூறியிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு கட்சியின் முன்னணித் தலைவரே அவரின் கட்சிக்குள் மாற்றுக் கட்சி ஆள்கள் இருப்பதாகச் சொல்வது இதுவரை நடக்காத ஒன்றாக வெளிப்பட்டுள்ளது. 

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சிக்குள்தான் இப்படி பா.ஜ.க.வுக்காக வேலைசெய்யும் தலைவர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

தேவையென்றால் கட்சியைச் சுத்தப்படுத்தும் வேலையை செய்யவும் தயார் என்றும் 40 தலைவர்கள்வரை பதவியிலிருந்து நீக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் முக்கியம்; வெறுமனே தேர்தலில் மட்டும் வேலைசெய்வது இல்லை என்றும் இராகுல்காந்தி கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com