காஷ்மீர் பயங்கரம் - டாக்டர் நயன்தாராவிடம் முதல்வர் நலம்விசாரிப்பு!

காஷ்மீர் பயங்கரம் - டாக்டர் நயன்தாராவிடம் முதல்வர் நலம்விசாரிப்பு!
Published on

காஷ்மீர் பெகல்காமில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட சென்னை மருத்துவர் பரமேசுவரன் இன்று வான் ஆம்புலன்ஸ் மூலம் தில்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 

இன்று மதியம் தில்லிக்கு வந்தடைந்த அவரை, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் ஆஷிஷ் குமார் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் பரமேஸ்வரனின் மனைவி டாக்டர் நயன்தாராவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது கணவரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு அரசு மூலம் தேவைப்படும்  அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் ஆறுதல் கூறினார்.

காஷ்மீருக்குச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 பேர் தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டு நேற்று இரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றவர்களை அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com