சங்க காலம் முதல் சம காலம்வரை தமிழர்களின் நிதி நிருவாகம் தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டு, தனி நூலாக இன்று வெளியிடப்பட்டது.
தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும் தொடர்ச்சியும் எனும் அந்தப் புத்தகத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, தலைமைச்செயலகத்தில் இன்று வெளியிட்டார்.
இந்த நூலும் இதன் உருவாக்கத்தோடு தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் தனி இணையப்பக்கமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், ஒன்றிய-மாநிலத் திட்டக் குழுக்களின் ஆய்வறிக்கைகள், நிதிநிலை அறிக்கை தொடர்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள், ஒளிப்படங்கள் அனைத்தும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலகத்தின் இந்தச் சிறப்பு இணையப் பக்கத்தில் வாசிக்கலாம்.
https://www.tamildigitallibrary.in/budget
தொடக்கநிகழ்வில், நூலாக்கத்தை வழிநடத்திய நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன், துணைச்செயலாளர்கள் பிரத்திக் தாயள், ரிஷப், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநர் கோமகன், நூலுருவாக்கக் குழுவைச் சேர்ந்த முதலமைச்சரின் துணைச்செயலாளர் ரகுபதி, திட்ட அலுவலர் இரா.சித்தானை, உதவி இயக்குநர் செல்வபுவியரசன், உள்ளடக்க மேலாண்மை அலுவலர்கள் எம்.ரமேஷ், ந.செல்லப்பா, த.ராஜன் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.