சர்ச்சைப் பேச்சு- பொன்முடி மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் ஆணை!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Published on

சைவம், வைணவம் ஆகியவற்றை விலைமாதுவைத் தொடர்புபடுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும் அவருடைய கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் அவரை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கவேண்டும் என கோரிக்கை நீடித்து வருகிறது. 

இந்நிலையில் பொன்முடி மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடி மீது வழக்குப்பதிய உத்தரவிட்டார். 

வழக்கு பதியாவிட்டால் நீதிமன்ற அவதூறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதேசமயம், பல வழக்குகள் போட்டால் நீர்த்துப் போய்விடும்; ஒரே வழக்காகப் பதியவேண்டும் என்றும் அவர் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பொன்முடி விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com