சவுக்கு சங்கர்- குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் முத்தரசன்!

சென்னை, கீழ்பாக்கத்தில் சவுக்கு சங்கர் வசிக்கும் வீட்டில் கழிவுநீர் ஊற்றி தாக்குதல்
சென்னை, கீழ்பாக்கத்தில் சவுக்கு சங்கர் வசிக்கும் வீட்டில் கழிவுநீர் ஊற்றி தாக்குதல்
Published on

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்த சம்பவம் அநாகரிகத்தின் உச்சம் - குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “யூட்டியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், அத்துமீறி நுழைந்து மனிதக் கழிவுகளையும், சாக்கடை கழிவுகளையும் வீடு முழுவதும் கொட்டிய செயல் அநாகரிகத்தின் உச்சமானது. நாகரிக சமூகம் எவ்வகையிலும் ஏற்கத்தக்க செயலல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பொதுத் தளங்களில் ஒருவரது பேச்சு, அடுத்தவர்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்தால் அதன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. அதற்கான சட்டப் பாதுகாப்புகளும் இருக்கின்றன. இந்த முறையான, சட்டரீதியான வாய்ப்புகளை நிராகரித்து விட்டு, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தை சீர்குலைக்கும் அராஜக செயலாகும். சவுக்கு சங்கரின் வீட்டில் நடந்த அராஜக செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com