சாம்சங் தொழிலாளர் சங்கத்துக்கு அங்கீகாரம்... நீதிமன்றக் கெடு முடியும் நாளில்!

சாம்சங் தொழிலாளர்களிடையே பேசும் சிஐடியு தலைவர்கள்
சாம்சங் தொழிலாளர்களிடையே பேசும் சிஐடியு தலைவர்கள்
Published on

தமிழ்நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சாம்சங் தொழிலாளர் போராட்டத்தின் பலனாக, இன்று அந்த சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.   

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர் சங்கம் வைக்க அனுமதி கேட்டு சிஐடியு சங்கத்தினர் விண்ணப்பித்தனர். ஆனால், தொழிலாளர் நலத் துறை அதைத் தராமல் இழுத்தடித்தது. 

இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில் தொழிலாளர் சங்கத்தினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 32 நாள்கள் போராட்டத்துக்குப் பின்னர் அரசு தலையிட்டு உடன்பாடு ஏற்பட்டது. 

ஆனாலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்ததில், சங்கத்தைப் பதிய அரசுக்கு ஆறு வாரங்கள் அவகாசம் தரப்பட்டது. அந்தக் கெடு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், தொழிலாளர் நலத் துறை சங்கத்தைப் பதிந்து கொடுத்தது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com