சிறுமதியாளர்கள்... ஆளுநரின் கருத்தை அடுத்து முதல்வர் ட்வீட்!

திருவள்ளுவர் நாள்- ஒடிசா மணல் சிற்பியின் கைவண்ணம்
திருவள்ளுவர் நாள்- ஒடிசா மணல் சிற்பியின் கைவண்ணம்
Published on

திருவள்ளுவர் தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் ஆர்.என்.இரவி வெளியிட்ட கருத்துகளுக்கு தி.மு.க. உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று மீண்டும் அவர் வள்ளுவரை சனாதனத்தோடு தொடர்புபடுத்தி மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

சமூக ஊடகங்களில் ஆளுநரின் கருத்துக்குக் கடுமையான எதிர்வினைகள் வந்தவண்னம் உள்ளன.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒடிசாவில் பூரி கடற்கரையில் வரையப்பட்ட அய்யன் திருவள்ளுவரின் பேரறிவு சிலையின் மணற் சிற்பத்தை மேற்கோள் காட்டி தன் சமூக ஊடகப் பக்கங்களில் கருத்துத் துணுக்கு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், 

”சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர்.

’மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

 கீழல்லார் கீழல் லவர்.’ “ என்று முதலமைச்சர் நறுக்கெனக் குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com