சிவகாசி பட்டாசு விபத்து- இறந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் நிதி!

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து (மாதிரிப் படம்)
Published on

விருதுநகர் மாவட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று மாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 38) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிச்சைக்கனி மகன் பால்பாண்டி (வயது 31) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சைபெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com