திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உறவுவைத்து ஏமாற்றியது தொடர்பாக, நா.த.க. தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறார். இதில், நேற்று உச்சநீதிமன்றம் சீமானுக்குச் சாதகமாக உத்தரவு வழங்கிய நிலையில், விஜயலட்சுமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.
அந்தக் காணொலியில்,” நேற்று வந்துள்ள தீர்ப்பு பிரகாரம் விஜயலட்சுமிக்கு சீமான் இரவோடு இரவாக 10 கோடி கொடுத்துவிட்டார். ஈழத்தமிழர்கள் அனுப்பிய காசில் அவளுக்குப் போய் கொடுத்துவிட்டார் என என் மீது அபாண்டமாக பழிசுமத்துவார்கள். இதனால் நான் விளக்கம் கொடுக்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி சீமான் மனுச்செய்தபோது, தமிழக காவல்துறை பாதிக்கப்பட்ட எனக்காக வாதாடினார்களே... அதன்பிறகுதானே நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்... அதைப்போல என் சார்பில் யாரையாவது வழக்குரைஞரை வைத்து, அந்தப் பொண்ணு பாதிக்கப்பட்டிருக்கிறார்... சும்மா அவர் வழக்குக் கொடுக்கவில்லை... மதுரை செல்வம் என்பவரை வைத்து டார்ச்சர் செய்திருக்கிறார்கள் என வாதிட்டிருக்க வேண்டுமல்லவா... நேற்றுவரை அவரை பாலியல் தொழிலாளி என்றெல்லாம் சொல்கிறார்களே என என் சார்பில் உச்சநீதிமன்றத்தில் யாராவது போய் சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா? என்ன நடந்தது? சீமான் அவர் சொன்னதை ஏற்று இப்போது தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள். நேற்று ஏன் எனக்காக யாரும் போய் உச்சநீதிமன்றம் போய் போராடவில்லை. நேற்றுமுன் தினம் நான் அழுததன் காரணம், இந்த வழக்கில் எனக்கு எந்த நீதியும் நியாயமும் கிடைக்கவிடமாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். இதுவரை மக்கள் எனக்குக் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.” என விஜயலட்சுமி பேசியுள்ளார்.