நா.த.க. தலைவர் சீமான் மீதான பாலியல் வழக்கு விவகாரம் பெரிதான நிலையில், சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் பாலியல் குற்றவாளி என அவரைக் குறிப்பிட்டு பெரும் பெரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில், திராவிடர் பெரியார் கழகம் என அமைப்பின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. அப்படியொரு அமைப்பா என சென்னையில் உள்ள பெரியாரிய அமைப்புகள் மத்தியிலேயே குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
கடைசியாக, மதுரையில், திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயல்பட்டுவந்த மணி அமுதன் என்பவர் அதிலிருந்து வெளியேறி, இப்படியொரு அமைப்பின் பெயரால் செயல்பட்டு வருவது தெரிந்தது.
இந்த நிலையில் இவர் மீது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அய்யனார் என்பவர் சென்னை, மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தன் கட்சியினருடன் சென்று புகார் அளித்தார்.
மணி அமுதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறினர்.