சீமான் பெருந்தொகை - வழக்கை ரத்துசெய்ய நீதிமன்றம் மறுப்பு!

சீமான்
சீமான்
Published on

நா.த.க. தலைவர் சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி நடிகை ஒருவர் புகார் செய்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு கூறியுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பைக் கிளப்பிய இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் மீண்டும் கவனம் பெற்றது.

நீதிபதி இளந்திரையன் கடந்த திங்களன்று இதில் தீர்ப்பளித்தார். 

அதில், சீமான் மீதான புகார் தீவிரத் தன்மை கொண்டது என்றும் பாலியல் வன்கொடுமை புகார் என்பதால் அதைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெற முடியாது என்றும் நடிகையின் புகாரால் சீமான் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 

நடிகையிடம் சீமான் பெருந்தொகை பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

சீமான் மீதான 10 ஆண்டுக்கும் மேற்பட்ட பழைய இந்தப் புகார் இப்போது மீண்டும் சூடுபிடித்துள்ளதால், அரசியல் தளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com