சீமான் வீட்டுப் பணியாளர்களுக்கு ஜாமின்!

சீமான் வீட்டு பாதுகாவலருக்கும் - போலீசாருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு
சீமான் வீட்டு பாதுகாவலருக்கும் - போலீசாருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு
Published on

நா.த.க. தலைவர் சீமான் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதாகப் புகார் எழுந்தது. ஆனால் காவல்துறையினரைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக வீட்டுக் காவலாளி அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டது. 

சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சோழிங்கநல்லூர் நடுவர் மன்றம் அவர்களுக்கு பிணை விடுதலை அளிக்க உத்தரவிட்டது. 

ஏற்கெனவே, இவ்வழக்கில் சீமான் கைதுசெய்யப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில், நேற்று அவரை விசாரித்தபின்னர் காவல்துறையினர் அனுப்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com