செங்கல்பட்டு கோத்ரெஜ் ஆலை திறப்பு- 1000 பேருக்கு வேலை!

செங்கல்பட்டு கோத்ரெஜ் ஆலை திறப்பு- 1000 பேருக்கு வேலை!
Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில் 515 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பை வழங்கும் நுகர்பொருள் ஆலை இன்று திறந்துவைக்கப்பட்டது.

திருப்போரூர் வட்டம், குன்னப்பட்டு கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “ கோத்ரெஜ் நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டோம். அடுத்த ஐந்தே மாதத்தில் அதாவது, 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த உற்பத்தித் திட்டத்தின் சிறப்பம்சமாக, 50 விழுக்காடு அளவுக்கு பெண்களுக்கும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதற்கு கோத்ரெஜ் நிறுவனத்தைப் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆலையில் சிந்தால் குளியல் சோப்பு உட்பட பலவகையான நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com